சென்னையில் 106.4 மெகாஹெர்ட்ஸில் ஒலிபரப்பாகும் ஹலோ எஃப்.எம்., தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மலர் பப்ளிகேஷன்ஸின் வானொலி நிலையம். 2006-ஆம் ஆண்டு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தொடங்கிய இது, பின்னர் மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவடைந்தது. தமிழ் திரைப்படப் பாடல்களும் உள்ளூர் நிகழ்ச்சிகளும் இதன் முக்கிய உள்ளடக்கம்.